FAIR PRACTICES CODE

This has reference to RBI Circular No. RBI/2014-15/34 DNBS (PD) CC No.388/03.10.042/2014-15 dated 1st July, 2014, (as updated on October 30, 2014) wherein the Reserve Bank of India (RBI) has revised the guidelines on Fair Practices Code for NBFCs to implement the same.
The Fair Practices Code, as mentioned herein below, is in conformity with these Guidelines on Fair Practices Code for NBFCs as contained in the aforesaid RBI Circular. This sets minimum Fair Practice standards for the Company to follow when dealing with customers. It provides information to customers and explains how the Company is expected to deal with them on business matters.

Objective of the Code

The code has been developed with an objective of:

Ensuring fair practices while dealing with customers
Greater transparency enabling customers in having a better understanding of the product and taking informed decisions
Building customer confidence
Siyat Holdings Private Limited (referred to as the "Company") has formulated the following procedures/fair practices in dealing with the business transactions.


Loans

i) Applications for loans and their processing




(a) All communications to the borrowers will be made in the vernacular language or a language as understood by the borrowers.




(b) Loan Application Forms include necessary information, which affects the interest of the borrower, so that a meaningful comparison with the terms and conditions offered by other NBFCs can be made and informed decision can be taken by the borrower. The loan application form indicates the documents required to be submitted with the application form.

(c) The Company would give acknowledgement for receipt of all loan applications. The time frame within which loan applications shall be disposed of is also indicated in the acknowledgement.





(ii) Loan appraisal and terms/conditions


The Company shall convey in writing to the borrower in the vernacular language as understood by the borrower by means of sanction letter, the amount of loan sanctioned along with the terms and conditions including annualised rate of interest and method of application thereof. The Company shall keep the acceptance of these terms and conditions by the borrower on its record. The Company shall also communicate to the borrower if the loan is rejected. The company shall mention the penal interest charged for late repayment in bold in the loan agreement. A copy of the loan agreement along with a copy of all the enclosures quoted in the loan agreement will be provided to all the borrowers at the time of sanction /disbursement of loan.


(iii) Disbursement of loans including changes in terms and conditions


(a) The Company shall give notice to the borrower in the vernacular language as understood by the borrower of any change in the terms and conditions including disbursement schedule, interest rates, service charges, prepayment charges etc. The Company shall ensure that changes in interest rates and charges are effected only prospectively. The Loan Agreement contains necessary provisions to this effect.



(b) Decision to recall / accelerate payment or performance under the agreement shall be in consonance with the loan agreement.






(c) The Company shall release all securities on repayment of all dues or on realisation of the outstanding amount of loan, subject to any legitimate right or lien for any other claim the Company may have against the borrower. If such right of set off is to be exercised, the borrower shall be given notice about the same with full particulars about the remaining claims and the conditions under which the Company is entitled to retain the securities till the relevant claim is settled / paid.


(d) A copy of the loan agreement along with a copy of all the enclosures quoted in the loan agreement will be provided to all the borrowers at the time of sanction /disbursement of loan.

(iv) General


(a) The Company shall refrain from interference in the affairs of the borrower except for the purposes provided in the terms and conditions of the loan agreement (unless new information, not earlier disclosed by the borrower, has come to the notice of the Company).

(b) In case of receipt of request from the borrower for transfer of borrowal account, the consent or otherwise i.e. the Company's objection, if any, shall be conveyed within 21 days from the date of receipt of request. Such transfer shall be as per transparent contractual terms in consonance with law.



(c) In the matter of recovery of loans, the company shall not resort to undue harassment viz. persistently bothering the borrowers at odd hours, use of muscle power for recovery of loans, etc. The company shall adequately train the staff to deal with the customers in an appropriate manner.

(d)As a measure of customer protection and also in order to bring in uniformity with regard to prepayment of various loans by borrowers, there shall be no foreclosure charges / pre-payment penalties on all floating rate term loans sanctioned to individual borrowers.

(v) Responsibility of Board of Directors


The Board of Directors have laid down the Grievance Redressal mechanism to ensure that all disputes arising are heard and disposed of at least at the next higher level. The Board would also periodically review the compliance of the Fair Practices Code and functioning of the Grievance Redressal Mechanism at various level of management and a consolidated report of such review will be submitted to the Board at regular intervals.

(vi) Grievances Redressal Officer


Complaints/disputes if any, shall be addressed by letter to Shri Anil Kumar Jain, Grievance Redressal Officer, Siyat Holdings Private Limited, Siyat House (IV Floor), 961, Poonamallee High Road, Chennai-600 084. Phone:044-42933306 / 9841050789 / Fax : 044-42933339 / Email id: info@sugalgroup.com. If the complaint / dispute is not redressed within a period of one month, the customer may appeal to the Officer-in-Charge of the Regional Office of DNBS of RBI. The General Manager, Department of Non Banking Supervision, Reserve Bank of India, Fort Glacis, Rajaji Salai, Chennai-600001. Phone: 044-25393406 / Fax: 044-25393797 / Email: dnbschennai@rbi.org.in under whose jurisdiction the registered office of the NBFC falls.

Mandatory display requirements

SHPL has the following in its registered office:

• Appropriate arrangement for receiving complaints and suggestions.
• Display of the name, address and contact number of the Grievance Redressal Officer.
Webhosting the Fair Practice Code in the website of the company

Regulation of Excessive Interest charged

(a) The Company has laid down appropriate internal principles and procedures in determining interest rates and processing and other charges. The Company has adopted an interest rate model taking into account cost of funds, margin and risk premium for determining rate of interest to be charged for loans and advances.


The rate of interest to be charged depends much upon the gradation of the risk of borrower viz. the financial strength, business, regulatory environment affecting the business, competition, past history of the borrower etc. The rate of interest and the approach for gradations of risk and rationale for charging different rate of interest to different categories of borrowers shall be disclosed to the borrower or customer in the application form and communicated explicitly in the sanction letter.
(b) The rates of interest and the approach for gradation of risks shall also be made available on the web-site of the company. The information published in the website shall be updated whenever there is a change in the rates of interest.

(c) The rate of interest will be annualised so that the borrower is aware of the exact rates that would be charged to the account.





வெளிப்படையான நடைமுறை விதிகள்

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை எண் RBI/2014-15/34 DNBS (PD) CC No.388/03.10.042/2014-15 தேதி : 01, ஜூலை 2014 (அக்டோபர் 30, 2014 அன்று மேம்படுத்தப்பட்டது) ரிசர்வ் வங்கி வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான வெளிப்படையான நடைமுறை விதி முறைகளை திருத்தி செயல் முறைப் படுத்தியது.
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான வெளிப்படையான நடைமுறை விதிகள் இங்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு விவரிக்கப்படுகிறது. நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கையாள்வதின் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச நடைமுறை விதிகளை வரையறுக்கிறது.

விதிகளுக்கான நோக்கம்:

இந்த விதிகள் பின்வரும் நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது

• வாடிக்கையாளர்களை கையாளும் போது வெளிப்படையான நடைமுறைகள் தான் பின்பற்றப்படுகிறது என்று உறுதி செய்கிறது
• வெளிப்படையான அணுகுமுறை வாடிக்கையாளர்கள் விதிகளை புரிந்து கொள்ள வாய்ப்பளித்து அவர்களை விவரம் தெரிந்து கொண்டு முடிவுகளை எடுக்கச் செய்கிறது.
• வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது
சியாட் ஹோல்டிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் , வணிக பரிமாற்றங்கள் கையாள்வதில் பின்வரும் வெளிப்படையான நடைமுறை விதிகளை பின்பற்றுகிறது.

கடன்கள் :

கடன்கள் மற்றும் அதற்கான செயலாக்க விண்ணப்பம்:


(1) கடன் பெறுவோரின் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழ் மொழியில் அல்லது கடன் பெறுவோர் புரிந்துக் கொள்ள கூடிய மொழியில் அமைக்கப்பட்டுள்ளது.

(2) கடன் விண்ணப்ப படிவங்கள் கடனுக்கான வட்டி போன்ற அத்தியாவசியமான தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்போது தான் கடன் பெறுவோர் மற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வரையறை மற்றும் நிபந்தனைகளோடு ஓப்பிட்டு தகவலறிந்த முடிவு எடுக்க இயலும். கடன் விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களைப் பற்றியும் விவரிக்கிறது.

(3) நிறுவனம் கடன் விண்ணப்பங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கு ரசீதில் ஒப்புகை வழங்க வேண்டும். கடன் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால வரையறையும் கடன் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.










கடன் மதிப்பீடு மற்றும் அடிப்படை / நிபந்தனைகள :


நிறுவனம் தமிழ் மொழியில் அல்லது வாடிக்கையாளர் புரிந்துக் கொள்ள கூடிய மொழியில் எழுத்து மூலம் கடன் பெறுவோருக்கு கடன் அனுமதி அளிக்கும் கடிதம் முலம் விவரிக்க வேண்டும். அதில் கடன் ஒப்புதல் தொகையையும் அதோடு விதிகள் மற்றும் நிபந்தனைகள் வருடாந்திர வட்டி விகிதம் உட்பட விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையும் குறிப்பிட வேண்டும். நிறுவனம் கடன் பெறுவோரிடமிருந்து பெறும் விதி நிபந்தனைகளுக்கான சம்மத ஆவணங்களை பெற்று அத்தாட்சிக்காக வைத்துக் கொள்ள வேண்டும். கடன் மறுக்கப்படும் போதும் நிறுவனம் விண்ணப்பதாரரோடு தொடர்பு கொண்டு கடன் மறுக்கப்பட்டதைத் தெரிவிக்க வேண்டும். நிறுவனம் கடனை திருப்பிக் கட்டுவதில் தாமதமானால் கால தாமதத்திற்கான அபராத வட்டியினைப் பற்றி கடன் ஒப்பந்தத்தில் அடிகோடிட்ட வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும். கடன் ஒப்பந்ததின் நகலுடன் சேர்த்து கடன் ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்ட அனைத்து இணைப்புகளின் நகலும் கடன் பெறும் அனைவருக்கும் கடனுக்குண்டான அனுமதி அளிக்கும்போதோ அல்லது கடன் பணத்தை அளிக்கும் போதோ தரப்பட வேண்டும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட கடன் தொகை பிரித்தளித்தல்:


(1) கடன் பெறுவோருக்கு நிறுவனம் தமிழில் அல்லது கடன் பெறுவோர் புரிந்துக் கொள்ளக் கூடிய மொழியில் விதி மற்றும் நிபந்தனைகளை மற்றும் கடன் அளிப்பதற்கான அட்டவணை, வட்டி விகிதம், சேவை கட்டணங்கள், முன் கட்டணத் தொகை இவற்றில் ஏற்படும் மாற்றங்களை சுற்றரிக்கையில் தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தின் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களில் மாற்றங்கள் எதிர்காலத்தில் மட்டுமே நிகழும் என்பதை உறுதிசெய்ய வேண்டும். இத்தகைய விளைவுகளை உண்டாக்ககூடிய தேவையான விதிகள் இந்த கடன் ஒப்பந்தத்தில் உள்ளன.

(2) கடனை திரும்ப உடனடியாக செலுத்தக் கோருதல் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை கடன் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

(3) நிறுவனம் கடன் பெறுவோரிடமிருந்து பெற்ற பத்திரங்கள் போன்றவற்றை கடன் திரும்ப செலுத்தியோ பின் அல்லது கடன் நிலுவை தொகை திரும்ப நியாயமான உரிமை உட்பட்டு செலுத்தியது உணர்ந்தப் பின்னோ அல்லது நிறுவனத்திற்கு கடன் பெற்றோர் வேறு ஏதேனும் கடன் பட்டிருந்தால் கடன் திரும்ப செலுத்த வேண்டிய தொகை அந்த தொகையிலிருந்து பெறப்படும் அதற்குப் பிறகு பத்திரங்கள் கடன் பெற்றவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்.

(4) கடன் ஒப்பந்ததின் நகலுடன் சேர்த்து கடன் ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்ட அனைத்து இணைப்புகளின் நகலும் கடன் பெறும் அனைவருக்கும் கடனுக்குண்டான அனுமதி அளிக்கும்போதோ அல்லது கடன் தொகையை அளிக்கும் போதுதோ தரப்பட வேண்டும்.

பொது:
(1) கடன் பெறுபவரின் விவகாரங்களில் நிறுவனம் கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் நிபந்தனைகளில் விவரிக்கப்பட்ட காரியங்களுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளும். வேறு எந்த காரியத்திற்க்காகவும் தலையிடாது . (ஆனால் கடன் பெற்றவர் நிறுவனத்திடம் தெரிவிக்காத புதிய தகவல் எதாவது கிடைத்தால் மட்டுமே அதற்கேற்றபடி நிறுவனம் செயல்படும்).
(2) கடன் பெறுவோர் தனது கடன் கணக்கை வேறு இடம் அல்லது அலுவலகத்திற்கு மாற்றுவதற்கு விண்ணபித்தால், நிறுவனம் விண்ணப்பம் கிடைத்த 21 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். இது போன்ற மாற்றங்கள் வெளிப்படையான முறையிலும் சட்டத் திட்டங்களின் முறையிலும் அமைந்திருத்தல் வேண்டும்.
(3) நிறுவனம் கடனை திரும்பப் பெறுவதற்காக கடன் வாங்கியவர்களை துன்புறுத்தக் கூடாது. கடன் பெற்றவர்களை அவர்களுக்கு ஒத்துவராத நேரங்களில் அடியாட்களை அனுப்பி வசூலிப்பது ஆகிய காரியங்களில் ஈடுபடக்கூடாது. நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு எப்படி வாடிக்கையாளர்களுடன் நடந்துக் கொள்ள வேண்டுமென்று பயிற்சி அளிக்க வேண்டும்.
(4) கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிக் கட்ட வேண்டிய தேதிக்கு முன்பே திருப்பிக் கட்டினால் அதற்கு எந்தவிதமன அபராதமும் விதிக்கக் கூடாது. இதனால் கடன் வாங்கியவர்களுக்கு தகுந்த நன்மை உண்டாகும். மாறக்கூடிய வட்டி செலுத்த வேண்டிய கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இயக்குனர் குழுவின் பொறுப்புகள்:
குறைகளை நிவர்த்தி செய்வதற்காக நடைமுறை விதிகளை இயக்குனர் குழு தயாரித்து உள்ளது. அதன்படி வாடிக்கையளர்களின் குறைகளை அடுத்த உயர் கட்டத்திலேயே தீர்த்து வைக்குமாறு செயலாக்க வேண்டும் இயக்குனர் குழு வெளிபடையான நடைமுறை விதிகளை எவ்வாறு நிறுவனம் செயல்படுத்துகிறது என்பதை அவ்வப்போது கண் கணிக்க வேண்டும் நிறுவனத்தின் வெவேறு அலுவலர்கள் எவ்வாறு விதிகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை இயக்குனர் குழு தனது சந்திப்புகளில் ஆய்வு செய்ய வேண்டும்.
குறைகள் / கோரிக்கை தீர்ப்பு அதிகாரி
ஏதேனும் புகார்களோ / குறைகளோ இருக்குமானால் கடிதம் மூலம் திரு. அனில் சுரானா, குறை தீர்ப்பு அதிகாரி, சியாட் ஹோல்டிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட், சியாட் ஹவுஸ், 4-வது மாடி, 961, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை - 600084. தொலைபேசி : 044-42933306 / 9841050789 / தொலைநகல் : 044-42933339 / மின்னஞ்சல்: info@sugalgroup.com என்கிற முகவரிக்கு தெரிவிக்கலாம். கொடுக்கப்பட்ட புகார் ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால் பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் பின்வரும் முகவிரியில் மேல் முறையீடு செய்யலாம். பொது மேலாளர், வங்கி சாரா மேற்பார்வை துறை, இந்திய ரிசர்வ் வங்கி, போர்ட் களாசிஸ், ராஜாஜி சாலை , சென்னை 600001 . தொலைபேசி: 044-25393406 / தொலைநகல் : 044-25393797 / மின்னஞ்சல்: dnbschennai@rbi.org.in.

காட்சிக்கு கட்டாயம் வைக்கத் வேண்டிய தகவல்கள்:

தனது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் சியாட் ஹோல்டிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் கிழ்க்கண்டவைகளை வைத்துள்ளது.

• குறை தீர்க்கும் அதிகாரியின் பெயர், முகவரி, மற்றும் தொலைபேசி எண்
• புகார் மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்க்கான ஏற்பாடு
• நிறுவனத்தின் வலைதளத்தில் வெளிப்படையான நடைமுறை விதிகளை பிரசுரித்துள்ளது.

அதிக வட்டி வாங்காமலிருப்பதற்கு கட்டுபாடுகள்:

1) வட்டி விகிதம் மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்கு நிறுவனம் தகுந்த விதி மற்றும் வழி முறைகளை தீர்மானித்துள்ளது. கடன் மற்றும் இதர வங்கி சேவைகளுக்கு வட்டி விகிதத்தைத் தீர்மானம் செய்ய நிறுவனம் பண மதிப்பு, கடனளவு, மற்றும் அபாய காப்பீடு இவற்றை கருத்தில் கொண்டு மாதிரி வட்டி விகிதத்தைத் பின்பற்றுகிறது. அபாயத்தின் தரத்தைப் பொறுத்து வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. கடனாளியின் கடன் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. கடனின் தரம், வாடிக்கையாளரின் பண வசதி, வியாபாரம், வியாபாரத்தை பாதிக்கும் சுற்றுபுற சுழல், வியாபாரத்தில் போட்டி, வாடிக்கையாளரின் கடந்த கால கடன் திருப்பி கட்டியதற்கான நடத்தை முதலியன தீர்மானிக்கிறது. 





வட்டி விகிதம் மற்றும் அதை தீர்மானம் செய்யும் வியாபாரத்தின் தன்மை மற்றும் தரம், பலதரப்பட்ட கடன்களுக்கு வசூலிக்கப்படும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் இவற்றின் தகவல்களை விண்ணப்ப படிவத்தில் தெரியப்படுத்துவதுடன் கடன் ஓப்புதல் அறிவிப்பு மடலில் தெளிவாக அறிவிக்க வேண்டும்.


2) இந்த தகவல் நிறுவனத்தின் வலைத்தளத்தில் பிரசுரிப்பதுடன், வட்டி விகிதங்கள் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அந்த தகவலை வலைதளத்திலும் அவ்வாறே அறிவிக்க வேண்டும்.

3) வாடிக்கையாளருக்கு தெளிவாகப் புரிவதற்காக வட்டி விகிதம் வருடாந்திரத்திற்கு எவ்வளவு விகிதம் என்று வசூலிக்கப்படும்.